பாலேஸ்வரம் கருணை இல்ல விவகாரம்: 282 பேரையும் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரம் பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் இருந்து அழைத்துச்சென்ற 282 பேரை இன்றைக்குள் மீண்டும் அதே இல்லத்தில் ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

காஞ்சிபுரம் பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் இருந்து அழைத்துச்சென்ற 282 பேரை இன்றைக்குள் மீண்டும் அதே இல்லத்தில் ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

காஞ்சிபுரம் பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் மாவட்ட வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி அங்குள்ளவர்களை மீட்டு அரசு பொறுப்பில் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளனர். மேலும், இந்தக் கருணை இல்லத்துக்கான காப்பக உரிமம் முடிந்துவிட்ட நிலையில், தற்போது வரை உரிமம் இல்லாமல் இயங்கிவருவது கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பாலேஸ்வரம் கருணை இல்லத்திலிருந்து தமிழக அரசு அழைத்துச் சென்ற 282 பேரையும் இன்றைக்குள் அங்கு ஒப்படைக்க வேண்டும் என வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர்களை தமிழக அரசு மீண்டும் பாலேஸ்வரம் கருணை இல்லத்திற்கு அழைத்துச் செல்லவும் உத்தரவிட்டுள்ளது. இதற்கு அரசு தரப்பில் பாலேஸ்வரம் இல்லத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட 294 பேரில் 12 பேர் இறந்துவிட்டனர். அதில் 282 பேர் பல இல்லங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் அறிக்கை தாக்கல் செய்திருந்தது.

பாலேஸ்வரம் கருணை இல்ல நிர்வாக இயக்குநர் தாமஸ் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனு மீது உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...