விளைநிலத்தில் மின்பாதை அமைக்க அளவீடு செய்ய முயன்ற அதிகாரிகள் விரட்டியடிப்பு

திருப்பூர் : திருப்பூரில் விளைநிலத்தில் மின்பாதை அமைப்பதற்காக நிலத்தை அளவீடு செய்ய முயன்ற பவர்கிரிட் அதிகாரிகளை, அப்பகுதிகளை விவசாயிகள் விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் : திருப்பூரில் விளைநிலத்தில் மின்பாதை அமைப்பதற்காக நிலத்தை அளவீடு செய்ய முயன்ற பவர்கிரிட் அதிகாரிகளை, அப்பகுதிகளை விவசாயிகள் விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பல்லடம் அருகே வாவிபாளையத்தில் சுமார் 5,000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் விவசாயத்தையே முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர். இந்த சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாய விளைநிலங்களின் வழியே பல்வேறு மின் பாதை, உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கும் பணிகளில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, உயர் மின்பாதை அமைக்க மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மேற்கொண்டு வரும் பணிக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், வாவிபாளையம் பகுதியில் உடுமலையைச் சேர்ந்த பவர்கிரிட் அதிகாரிகள், மின்கோபுரம் மற்றும் மின் வழித்தடம் அமைப்பதற்கான நிலஅளவீடு செய்யும் பணியை இன்று மேற்கொண்டனர். இதையறிந்த அப்பகுதி விவசாயிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அதிகாரிகள் வந்த வாகனங்களையும் சிறைபிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. விவசாயிகளின் இந்தப் போராட்டத்தால் அதிகாரிகள் மேற்கொண்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் தங்களது அளவீட்டுப் பணியை நிறுத்தி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, விவசாயிகள் திரண்டு மின்வாரிய அதிகாரிகளை அப்பகுதியை விட்டே விரட்டியடித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், "மத்திய, மாநில அரசுகளின் மின் திட்டங்களால் சிறு, குறு விவசாயிகள் நிலங்களை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. உடனடியாக மத்திய, மாநில அரசுகள் இத்திட்டத்தைக் கைவிட்டு, நெடுஞ்சாலையோரம் இத்திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். இல்லையெனில், விவசாய விளைநிலத்தில் மின்திட்ட அதிகாரிகள் நுழைய அனுமதிக்க மாட்டோம். பலகட்டப் போராட்டங்களில் ஈடுபடுவோம்," இவ்வாறு கூறினர். 

Newsletter

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...