செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய பெண்கள்

கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தனியாருக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து இலவச பட்டாவாக வழங்கிய வருவாய்த் துறையினரைக் கண்டித்து இரு பெண்கள் செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தனியாருக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து இலவச பட்டாவாக வழங்கிய வருவாய்த் துறையினரைக் கண்டித்து இரு பெண்கள் செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிக்கதாசம்பாளையம் ஊராட்சிக்குட்பட்டது உக்கா நகர் பகுதி. இங்கு, வருவாய்த்துறைக்கு சொந்தமான இடத்தினை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசின் உத்தரவு பேரில், ஏழை பொதுமக்கள் 100 பேருக்கு இலவச பட்டாவாக பிரித்து வழங்கப்பட்டது. இந்த இடத்தினை ஒட்டிய தனியார் இடத்தினையும் சேர்த்து பட்டா வழங்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, அந்த இடத்திற்கு சொந்தமானவர்கள் சார்பில் மேட்டுப்பாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கினை விசாரித்த நீதிமன்றம், வழக்கு முடியும் வரை அந்த இடத்தில் வசிப்பவர்களுக்கு எந்த அடிப்படை வசதியும் உள்ளாட்சி நிர்வாகம் செய்து கொடுக்க தடைவிதிப்பதாக உத்தரவிட்டது.

இந்நிலையில், இன்று அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் சொந்த முயற்சியில் கழிப்பிடம் மற்றும் சாக்கடை கட்ட முற்பட்டுள்ளனர். இதனை அந்த இடத்தின் உரிமையாளர்கள் தடுத்ததால் தகராறு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தவறாக தங்கள் இடத்தினை மற்றவர்களுக்குப் பகிர்ந்தளித்த வருவாய்த்துறையினரைக் கண்டித்தும் அந்தப் பகுதியில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி திடீரென தற்கொலைக்கு முயன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 



இதனையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கிழே இறங்குமாறு கூறினார். ஆனால், அதனை ஏற்க மறுத்த பெண்கள் சுமார் ஒரு மணிநேரமாக தொடர்ந்து செல்போன் டவரில் நின்று போராட்டம் நடத்தினர். பின்னர், போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மேலே ஏறி பேச்சுக்கொடுத்து, அந்தப் பெண்களை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து, அவர்களிடம், போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். 

Newsletter

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...