காவிரி விவகாரம் : மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு அவமதிப்பு வழக்கு தாக்கல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. 



காவிரி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய இறுதித்தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழகத்துக்கு கர்நாடகம் வழங்க வேண்டிய நீரின் அளவைக் குறைத்து கடந்த மாதம் 16-ந் தேதி தீர்ப்பு வழங்கியது. என்றாலும், ஏற்கனவே நடுவர் மன்றம் வழங்கிய இறுதித்தீர்ப்பை செயல்படுத்த ‘ஸ்கீம்’ (செயல் திட்டம்) ஒன்றை 6 வாரங்களுக்குள் ஏற்படுத்துமாறு மத்திய அரசுக்கு அப்போது உத்தரவிட்டது.

நடுவர் மன்றம் தனது இறுதித்தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவையும் அமைக்குமாறு கூறி இருந்ததால், சுப்ரீம் நீதிமன்ற உத்தரவின்படி அந்த இரு அமைப்புகளையும் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன. ஆனால், கர்நாடக அரசோ, ‘ஸ்கீம்’ ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் உச்சநீதிமன்றம் கூறி இருக்கிறதே தவிர காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு உத்தரவிடவில்லை என்று கூறி வருகிறது.

ஆனால், மத்திய அரசு இதுபற்றி இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுமா..? அமைக்கப்படாதா..? என்பது பற்றி மத்திய அரசு எதுவும் கூறாமல் மவுனம் காத்து வருகிறது. இந்த நிலையில், உச்சநீதிமன்றம் விதித்த 6 வார கால ‘கெடு’ வியாழக்கிழமையுடன் முடிவடைந்தது. காவிரி மேலாண்மை அமைப்பது பற்றி மத்திய அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

இதனால், அடுத்த கட்டமாக சட்ட ரீதியாக என்னென்ன நடவடிக்கைகளை எடுப்பது என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசின் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. 

பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் ஏற்கனவே கடந்த 27-ந் தேதி டெல்லி சென்று, காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவையும் உடனே அமைக்கவேண்டும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திடம் பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்துவிட்டு சென்னை திரும்பினார்கள். அவர்கள் இருவரும் நேற்றிரவு மீண்டும் டெல்லி சென்னர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று காலை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

Newsletter

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...