மேட்டுப்பாளையம் அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் 8 பேர் படுகாயம்

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, பாறையின் மீது மோதிய விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, பாறையின் மீது மோதிய விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

மேட்டுப்பாளையத்தை அடுத்த வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சுமார் 18 பேர் நீலகிரி மாவட்டம் எம்ரால்டு பகுதியில் உள்ள ஒரு கோவில் விஷேச நிகழ்ச்சியில் இசை மேளம் வாசிக்க குழுவாக லாரியில் சென்றுள்ளனர். அத்திகடவு அருகே உள்ள சொரண்டி மேடு என்ற இடத்தில் லாரி சென்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டினை இழந்த லாரி சாலையின் ஓரத்தில் இருந்த பாறையின் மீது மோதி கவிழ்ந்து விபத்துகுள்ளானது. இதில், அந்த லாரியில் பயணித்த சுமார் 8 பேர் படுகாயமடைந்தனர். மேலும், 10 பேர் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த அப்பகுதி கிராம மக்கள் மற்றும் போலீசார், படுகாயமடைந்த பாலசுப்ரமணி, மகேஷ், நாகராஜ், சுரேஷ் உள்பட 8 பேரை மீட்டு ஆம்புலனஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், விபத்து குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...