திரையரங்குகளில் திரையிடப்பட்ட முதலமைச்சர் குறித்த விளம்பரம் நிறுத்தம்

திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டு வந்த 'சாமி எடப்பாடி பழனிசாமி பெயருக்கு அர்ச்சனை' என்ற விளம்பரத்தை நிறுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டு வந்த 'சாமி எடப்பாடி பழனிசாமி பெயருக்கு அர்ச்சனை' என்ற விளம்பரத்தை நிறுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் தமிழக செய்தித்துறை சார்பில் அரசு விளம்பரம் ஒன்று ஒளிபரப்பப்பட்டு வந்தது. இந்த விளம்பரத்தில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தனக்கு வேலை கிடைத்ததற்கு கோவிலுக்கு அர்ச்சனை செய்ய வருகிறார். பூசாரி அந்த பெண்ணுக்கு அர்ச்சனை செய்யும் போது அந்தப் பெண், சாமி அர்ச்சனை என் பெயருக்கு இல்ல, சாமி பெயருக்கு என்கிறார். இதற்கு பூசாரி..எந்த சாமிக்கு என்று கேட்க..அந்தப் பெண் நம்ம தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயருக்கு என்கிறார். திரையரங்கிற்குப் படம் பார்க்க வந்தவர்கள் இந்த விளம்பரத்தைக் கண்டு அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விடீயோவிற்கு தற்போது மீம்ஸ்கள் குவிய ஆரம்பித்துள்ளன.

இந்த நிலையில், இந்த விளம்பரத்தை திரையரங்குகளில் ஒளிபரப்புவதை நிறுத்த தமிழக செய்தித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், "முதலமைச்சர் குறித்து திரையரங்குகளில் வெளியான விளம்பரம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் எடுத்துக் கூறப்பட்டு, அந்த விளம்பரம் நிறுத்தப்பட்டு விட்டது," எனக் கூறினார்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...