பள்ளிப் பேருந்துகளில் வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆய்வு

மேட்டுப்பாளையம் : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பள்ளிப் பேருந்துகளில் வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

மேட்டுப்பாளையம் : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பள்ளிப் பேருந்துகளில் வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 

மேட்டுப்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட பெரியநாயக்கன்பாளையம் மற்றும் அன்னூர் பகுதிகளில் இயங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவ, மாணவியரை ஏற்றிச் செல்லும் பள்ளி பேருந்துகள் மற்றும் வாகனங்களை மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இன்று காலை 40 பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்களை, மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி மைதானத்தில் வைத்து வட்டார போக்குவரத்துத் துறை அலுவலர் தியாகராஜன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 

அரசு விதிமுறைகளின்படி, பள்ளி வாகனங்கள் பராமரிக்கப்படுகிறதா..?, பேருந்தில் உள்ள அவசரகால வழி, மருத்துவ முதலுதவி பெட்டிகள், தீயணைப்பு கருவிகள் சரியாக உள்ளனவா..?, வாகனங்களின் பிரேக், கியர் மற்றும் டயர்கள் நல்ல நிலையில் உள்ளதா..? போன்ற சோதனைகள் நடத்தப்பட்டன. மேலும், சந்தேகத்திற்குரிய பேருந்துகளை வட்டாரப் போக்குவரத்து அதிகாரி தியாகராஜன், தானே பேருந்தினை ஓட்டி அவற்றின் தரம் குறித்து சோதனை செய்தார்.

மேலும், ஓட்டுநர்கள் செல்போன் பேசியபடி, பள்ளி வாகனங்களை இயக்குவது, அதிவேகமாகப் பேருந்துகளை இயக்குவது, பள்ளி குழந்தைகள் வாகனங்களை விட்டு இறங்கும் முன்பாக வண்டியை நகர்த்துவது போன்றவற்றை முற்றிலுமாக தவிர்க்கப்படவேண்டும் என பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர். இந்த விதிகளை மீறுவோரின் வாகன உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். நாற்பது வயதைக் கடந்த ஓட்டுனர்கள் உடல் பரிசோதனை மற்றும் கண் பரிசோதனை செய்வது அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...