நீட் தேர்வுக்கு இந்தியில் வினாத்தாள்கள் : தாமதமாக தேர்வெழுதிய தமிழக மாணவர்கள்

மதுரை: மதுரை நரிமேடு நாய்ஸ் பள்ளியில் இந்தியில் வினாத்தாள்கள் வழங்கப்பட்டதால் 120 மாணவர்கள் தாமதமாக தேர்வெழுத வேண்டிய நிலை ஏற்பட்டது.

மதுரை: மதுரை நரிமேடு நாய்ஸ் பள்ளியில் இந்தியில் வினாத்தாள்கள் வழங்கப்பட்டதால் 120 மாணவர்கள் தாமதமாக தேர்வெழுத வேண்டிய நிலை ஏற்பட்டது.

மதுரை நரிமேடு நாய்ஸ் பள்ளியில் 720 மாணவர்கள் நீட் தேர்வை எழுதுவதற்கான மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் 120 மாணவர்களுக்கு இந்தியில் அச்சடிக்கப்பட்ட வினாத்தாள்கள் வழங்கப்பட்டது. இதனால், அந்த மாணவர்களால் தேர்வு எழுத முடியவில்லை. இதனையடுத்து, ஆங்கிலம், தமிழ் வினாத்தாள்களுக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி 120 மாணவர்களையும் தேர்வு நடைபெறும் வளாகத்திற்குள்ளேயே தேர்வு அதிகாரிகள் அமரவைத்திருந்தனர்.

பெற்றோர் உட்பட யாருமே அந்த மாணவர்களைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், அந்த 120 மாணவர்களுக்கும் அங்கேயே மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர், மிகவும் தாமதமாக ஆங்கிலம், தமிழ் மொழிகளில் அந்த மாணவர்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, வினாத்தாள் மொழிச் சிக்கலால் காக்க வைக்கப்பட்டிருந்த 120 மாணவர்களும், பிற்பகல் 2.40 மணிக்கு நீட் தேர்வை எழுதினர்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...