சோலார் மின் உற்பத்தி செய்ய 30 சதவீதம் மானியம்: மாவட்ட ஆட்சியர் தகவல்

கோவை: சோலார் மின் உற்பத்தி செய்யும் சாதனத்தை கட்டிடங்களின் மேற்கூரையில் நிறுவுவதற்கு 30 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


கோவை: சோலார் மின் உற்பத்தி செய்யும் சாதனத்தை கட்டிடங்களின் மேற்கூரையில் நிறுவுவதற்கு 30 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

சூரிய மின்சக்தி (சோலார்) உற்பத்தி செய்யும் சாதனத்தை கட்டிடங்களின் மேற்கூரையில் நிறுவுவதற்கு தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் மூலம் 30 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-



கோயம்புத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் மூலம் மரபுசாரா எரிசக்தியினை மேம்படுத்தும் திட்டங்கள் மாவட்டம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது மத்திய அரசு, சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும் சாதனங்களை (Grid Connected Roof Top Solar System) கட்டிடங்களின் மேற்கூரையில் நிறுவுவதற்கு 30 சதவீத மானியம் அறிவித்துள்ளது.

அவ்வாறு அமைப்பவர்களின் உபயோகத்திற்கு போக, மீதமுள்ள மின்சாரம், மின்வாரியத்திற்கு நிகர அளவி (Net Meter) மூலம் அனுப்பப்படுவதால் மின்கட்டணம் செலுத்துவது முற்றிலும் குறைக்கப்படுகிறது.

மானியம்

இத்திட்டத்தின் கீழ் ஒரு பயனாளி தங்களுடைய மின்சார உபயோக தேவைக்கேற்ப ஒரு கிலோ வாட் முதல் 500 கிலோ வாட் வரை பயன்பெறலாம். இந்த மானியத்தை பெறுவதற்கு அனைத்து தனிநபர் குடியிருப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகள், கான்கிரீட் கட்டிடங்களில் இயங்கும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், அறக்கட்டளைகள், மருத்துவமனைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் கல்விக்கான பணிமனைகள், விடுதிகள் போன்றவை தகுதியானவை ஆகும்.

பயன்பெற விரும்பும் தனிநபர் அல்லது நிறுவனங்கள் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் இயங்கி வரும் TEDA பிரிவில் உரிய ஆலோசனைகள் பெறலாம். மேலும், அலுவலக பணி நேரங்களில் TEDA பிரிவின் உதவி பொறியாளரை நேரடியாகவும் அல்லது 7708064702 என்ற தொலைப்பேசி எண் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...