பேராசிரியை நிர்மலா தேவியை மே 23 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு

மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயன்ற வழக்கில், பேராசிரியை நிர்மலா தேவியை வரும் 23-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க விருதுநகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயன்ற வழக்கில், பேராசிரியை நிர்மலா தேவியை வரும் 23-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க விருதுநகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியின் உதவி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயன்ற சம்பவம் தமிழக வரலாற்றில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த ஏப்., 16-ந்தேதி நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் நிர்மலாதேவி அடைக்கப்பட்டார்.

இதனிடையே, நிர்மலா தேவி விவகாரம் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. பின்னர், அவர் சி.பி.சி.ஐ.டி., காவலில் எடுக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வந்தார். இந்த நிலையில், பேராசிரியை நிர்மலா தேவி மதுரை சிறையில் இருந்து விருதுநகர் கொண்டு செல்லப்பட்டார். நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவதால், போலீசார் அவரை விருதுநகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்டுத்தினர். அப்போது, அவரை மே 23-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Newsletter

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...