பல்லடம் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலி - ஐவர் காயம்

திருப்பூர்: பல்லடம் பேருந்து நிலையத்திற்குள் உள்ள கழிவறையின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: பல்லடம் பேருந்து நிலையத்திற்குள் உள்ள கழிவறையின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பூர், கோவை, தாராபுரம் மற்றும் பல்லடம் சுற்றுவட்டார கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று மாலை அப்பகுதியில் கன மழை பெய்தது. இதன் காரணமாக பேருந்து நிலையத்திற்குள் இருந்த கழிவறையின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில், அம்மாபாளையத்தை சேர்ந்த அசோக் என்பவர் தலையில் பலத்த காயமடைந்தது, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஐந்து பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக தகவல் கிடைத்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று கிரேன் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.



இந்த விபத்து குறித்து பல்லடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சோமனூர் பேருந்து நிலையம் இடிந்து விழுந்த விபத்தில் ஐந்து பேர் பலியாகினர். அப்போது, தமிழகத்தில் உள்ள பேருந்து நிலையங்களை புனரமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். தற்போது, மீண்டும் ஒரு பேருந்து நிலையம் இடிந்து விழுந்து ஒருவர் பலியான சம்பவத்தில் பொதுமக்கள் கொதிப்படைந்துள்ளனர்.



Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...