உணவக மேற்கூரை இடிந்து விழுந்து இளம் பெண் பலி

திருப்பூர் : திருப்பூரில் தனியார் உணவக மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் உயிரிழந்தார்.


திருப்பூர் : திருப்பூரில் தனியார் உணவக மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் உயிரிழந்தார். 



திருப்பூர் மாவட்டம் அவினாசியில் சாம் என்பவர் அமிர்தம் என்ற உணவகம் நடத்திவருகிறார். கடந்த வாரம் பெய்த தொடர் கனமழை காரணமாக அந்த உணவகத்தின் கான்கிரீட் கூரை நேற்று மாலை திடீரென சரிந்து விழுந்தது. அப்போது அங்கு உணவு வாங்கச் சென்ற சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சரவஸ்வதி (22) என்ற பெண் இடிபாடுகளில் சிக்கி பலியானார். மேலும், உளுந்தூர் பேட்டை பகுதியை சேர்ந்த பிரியா (21), ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சுனிதா (22) ஆகியோர் லேசான காயமடைந்தனர். 

அவர்களை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து அவினாசி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  பொதுமக்கள் அதிக நடமாட்டம் மிகுந்த இப்பகுதியில் ஏற்பட்ட விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.  இதனால் கோவை & ஈரோடு சாலையில் சுமார் இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...