பின்னலாடைத் துறை மூலம் 62 மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் - மத்திய அமைச்சர்

திருப்பூர் : வரும் 2020-ம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் பின்னலாடைத் துறை மூலம் 62 மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மத்திய அமைச்சர் கிரி ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் : வரும் 2020-ம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் பின்னலாடைத் துறை மூலம் 62 மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மத்திய அமைச்சர் கிரி ராஜ் சிங் தெரிவித்துள்ளார். 



திருப்பூரில் சிட்கோ தொழிற்பேட்டை பகுதியில் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவன அமைச்சகத்தின் மூலம் நிதி உதவி பெற்று அமைக்கப்பட்ட லிவ்லிகுட் தொழில் மையத்தினை பார்வையிட்ட அமைச்சர் கிரி ராஜ் சிங் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "முதல் முறையாக நிதி நிலையை சீர் செய்ய அமல்படுத்த ஜி.எஸ்.டி மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இழப்பு ஏற்பட்டது. இந்த நடவடிக்கையால் வரி வசூலானது. வழக்கத்தை விட 100 கோடியைத் தாண்டியுள்ளது. டெக்ஸ்டைல் துறையின் தாய் இடமாக திருப்பூர் விளங்கி வருகிறது. இந்தியாவின் பின்னலாடை உற்பத்தியில் திருப்பூரின் உற்பத்தி 48 சதவீதமாக உயர்ந்துள்ளது. 



திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் பல நவீன முறைகளைப் பின்பற்றி வருகிறது. வரும் 2020-ம் ஆண்டு இந்தியா முழுவதும் பின்னலாடைத் துறை மூலம் 62 மில்லியன் வேலை வாய்ப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இத்துறை இந்தியாவின் மிகவும் சக்தி வாய்ந்த துறையாக உருவெடுத்து வருகிறது. மேலும், சிறு குறு வர்த்தகர்களை ஊக்குவிக்கும் விதமாக பிரதம மந்திரியின் சிறு குறு தொழில்களுக்கான கடன் திட்டத்தின் கீழ், கடன் தொகை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. அதற்காக எந்தவித சொத்து பிணையும் வாங்குவதில்லை. மேலும், கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க., நிச்சயம் தனது பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியமைக்கும்." என்றார். 

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...