நாளை வெளியாகிறது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

கோவை: தமிழகம், புதுச்சேரியில் 10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகின்றன.


கோவை: தமிழகம், புதுச்சேரியில் 10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகின்றன.

தமிழகம், புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 16-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 20-ம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வினை 12,337 பள்ளிகளில் இருந்து 4,83,120 மாணவர்கள், 4,81,371 மாணவிகள் என 9,64,491 பேர் எழுதினர். இதுதவிர, 36,649 பேர் தனித்தேர்வர்களாக தேர்வில் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், தேர்வு முடிவுகளை அரசு தேர்வுத் துறை நாளை (மே 23) காலை 9.30 மணிக்கு வெளியிடுகிறது. மாணவர்கள் அளித்திருந்த செல் போன் எண்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தேர்வு முடிவுகள் மதிப்பெண்களுடன் அனுப்பப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதள முகவரியிலும் தேர்வு முடிவுகளை பார்க்கலாம்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...