ஸ்டெர்லைட் போராட்டம்: வ.உ.சி மைதானத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

கோவை: ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பான போராட்டத்தை அடுத்து கோவை வ.உ.சி., மைதானத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கோவை: ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பான போராட்டத்தை அடுத்து கோவை வ.உ.சி., மைதானத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 



கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஸ்டெர்லைட்க்கு ஆதரவாகவும் மற்றும் காவல் துறையைக் கண்டித்தும் பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த பகுதியான வ.உ.சி., மைதானத்தில் நேற்று மாணவர்கள் சிலர் ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் துறையை கண்டித்தும் பதாகைகளை ஏந்தி நின்றனர். அவர்களை கைது செய்த போலீசார் பின்னர், அவர்களை பிணையில் விடுவித்தனர்.

இந்த சூழலில், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அந்த பகுதியில் போராட்டம் நடத்தக்கூடும் என்ற தகவல் வந்ததையடுத்து வ.உ.சி., மைதானம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மைதானத்தின் உள்ளேயும், வெளியேயும் சிறப்பு காவல் ஆய்வாளர், காவலர் மற்றும் உர்க்காவல் படையினர் என்று 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வழியே செல்லும் வாகனங்களையும் போலீசார் சோதனைகள் செய்து வருகின்றனர்.



Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...