தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சியா..?: பால் முகவர்கள் சங்கம் கடும் கண்டனம்

கோவை: சர்வாதிகார ஆட்சியை நடத்தி வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசுக்கு கோவை பால் முகவர்கள் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கோவை: சர்வாதிகார ஆட்சியை நடத்தி வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசுக்கு கோவை பால் முகவர்கள் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பால் முகவர்கள் சங்கம் கூறியிருப்பதாவது :- தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அறவழியில் போராடிய பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 பேர் உயிரிழந்தனர். அப்பாவி பொதுமக்களைச் சுட்டுக் கொன்ற போலீசாரின் வெறியாட்டத்தை தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் சமூக வலைதளங்களின் வாயிலாக தங்களின் பாதிப்பை உலகறிய செய்து வருகின்றனர். ஊடகங்களையெல்லாம் தங்களின் மிரட்டல்களால் கட்டுப்படுத்தி, காட்டாட்சி நடத்தும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., அரசு, தற்போது தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவைகளை முற்றிலுமாக முடக்கியிருப்பதாக அறிகிறோம்.

ஹிட்லர், முசோலினி போன்ற சர்வாதிகாரிகளின் ஆட்சியைக் கண் முன்னே நடத்திக் கொண்டு, எமர்ஜென்சி காலகட்டத்தை நினைவூட்டும் விதமாக செயல்பட்டு வரும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் முற்றிலுமாக முடக்கப்பட்டிருக்கும் இணையதள சேவைகளை உடனடியாக வழங்கிட உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

மக்கள் நலனுக்கு எதிராக ஆட்சி செய்யும் ஆட்சியாளர்கள் எவராக இருந்தாலும், அவர்கள் நீண்ட காலமாக ஆட்சியில் நீடிக்க முடியாது என்பது வரலாறு கூறும் உண்மை. எனவே, மக்கள் விரோத அரசாக இருக்கும் அ.தி.மு.க., அரசு உடனடியாக மக்கள் நலனுக்கு ஆதரவான அரசாக மாற வேண்டும். இல்லையெனில், ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுக்க கடமைப்பட்டுள்ளோம், இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...