ஸ்டெர்லைட் ஆலை மூடல் : தலைவர்கள் கருத்து

தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டதையடுத்து 22 ஆண்டுகள் இயங்கி வந்த ஆலை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. ஆலையில் வாயிலில் அதற்கான ஆணையும் ஒட்டப்பட்டது. இது குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் கருத்து விவரம் :-

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி :-மக்களின் எண்ணப்படியே ஆலையை மூட அரசாணை பிறக்கப்பட்டது. இனி தூத்துக்குடி மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ :- நீதிமன்ற உத்தரவு பெற்று வந்தாலும் ஆலையை திறக்க விடமாட்டோம்.

தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் :- அரசாணையை வரவேற்கிறேன். ஆலையில் உள்ள கழிவுகளை அப்புறப்படுத்தி சுகாதாரத்தை ஏற்படுத்த வேண்டும். இனி நீதிமன்ற உத்தரவு பெற்றாலும் ஆலையை திறக்க அனுமதி கூடாது.

மக்கள் நீதி மையம் நடிகர் கமல் : ஆலையை மூட அரசு பிறப்பித்த உத்தரவு மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. 

இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பச்சைமுத்து :- ஆலையை மூட எடுத்த நடவடிக்கையில் அரசு உறுதியாக இருக்க வேண்டும், எனக் கூறினர். 

Newsletter

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...