கிராமப்புற மலைவாழ் மக்களிடம் இலவச பட்டா வழங்குவதாக கூறி மோசடி

கோவையில் உள்ள மடக்காடு, தாணிக்கண்டி மற்றும் முள்ளாங்காடு கிராமப் பகுதிகளில் உள்ள மலைவாழ் பழங்குடியின மக்கள் ஈஷா யோகா மையத்திற்கும், எங்கள் கிராமத்திற்கும் உள்ள நல்லுறவை சீர்குலைக்கும் நோக்கத்துடன் தன்னுடைய சுபலாபத்திற்காக எங்களை பயன்படுத்திய சிவசண்முகம் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


ஈஷாவிற்கு அருகில் உள்ள மடக்காடு, தாணிக்கண்டி மற்றும் முள்ளாங்காடு ஆகிய கிராமப் பகுதிகளில் மலைவாழ் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் இங்கு வசித்து வருகின்றனர். ஈஷா யோகா மையம் இப்பகுதி மக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள், போக்குவரத்து வசதி, வேலைவாய்ப்பு வசதி, கல்வி உதவி என அனைத்து உதவிகளும் செய்து வருகின்றனர். இப்படி ஈஷா யோகா மையத்திற்கும், எங்கள் கிராமத்திற்கும் உள்ள நல்லுறவை சீர்குலைக்கும் நோக்கத்துடன்  கோவை பகுதியைச் சேர்ந்த சிவசண்முகம் என்பவர் தன்னை பத்திரிக்கை நிருபர் என்றும், உங்கள் பகுதி மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா அரசாங்கத்திடம் இருந்து பெற்று தருவதாக கூறி எங்கள் பகுதி மக்களிடம் ரூ.2500 பணம் வாங்கிக்கொண்டு இதுவரைக்கும் வீட்டுமனை பட்டா வாங்கித் தராமல் ஏமாற்றி வருகிறார்.

மேலும் இரண்டு நாட்களுக்கு முன்பு, ஈஷா யோகா மையம் எங்கள் கிராமத்தில் 43 ஏக்கர்  நிலத்தை ஈஷா அறக்கட்டளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. என்று பொய்புகார் அளித்து எங்களை பயன்படுத்தியுள்ளார். மலைவாழ் பழங்குடியினர் மக்களின் அறியாமையை பயன்படுத்தி, தன்னுடைய சுபலாபத்திற்காக எங்களை பயன்படுத்திய சிவசண்முகம் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பள்ளியில் போதை எதிர்ப்பு மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் உள்ள பீளமேடு தொடக்கப்பள்ளியில் போதைப்பொருள் தீமைகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்...

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...