காடுகள் மற்றும் குளங்கள் சம்பந்தமான தீர்மானங்கள் நிறைவேற்றம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் 3C குழு சார்பாக நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில்  பல்வேறு தீர்மானங்கள் பற்றி பேசப்பட்டது. இக்கூட்டத்தில் குறிச்சி குளம் வெல்பர் அசோசியேஷன் மணிகண்டன், பசுமை தாயகம் ராஜேந்திரன், சுரேஷ் பண்டாரி, பத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: சமூக காடு வளர்பு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிலத்தை கண்டுபிடித்து அதற்கு தேவையான ஆவனங்களை தயார் செய்து அங்கு இடத்தின் தன்மைக்கேற்ப நாட்டு மரங்களை நட்டு அதை முறைப்படி 3 வருடங்கள் பராமரித்தல். முக்கியமாக வெள்ளளூர் குப்பைக்கிடங்கின் அருகில் உள்ள இடத்தை பராமரித்தல். சுந்தராபுரம் முதல் திருச்சி சாலையில் கிட்டத்தட்ட 5 கிலோமீட்டர் சாலையோரத்தில் மரங்கள் நட்டு பராமரித்தல். மதுக்கரை சாலையில் அமைந்த மலைப்பாதையில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி அங்கு மழையை ஈர்க்கும் மரங்களை நட்டு பராமரித்தல். குறிச்சி குளத்திலிருந்து தூர்வாரும் மண்ணை மதுக்கரை ரோட்டில் அமைந்த மலைகளில் சில தனியார் நிறுவனங்கள் ஏற்படுத்திய மிகப்பிரமாண்ட குழியில் இட்டு நிரப்பி, அதில் காடுகள் அமைத்தல். மதுக்கரையிலிருந்து குறிச்சி நோக்கி ஓடும் கால்வாயை சுத்தப்படுத்தி நன்நீர் ஓடும் கால்வாயாக மாற்றுதல். நட்டுவைக்கும் மரங்களை ஜியோடேக் முறைப்படி பதிவு செய்து அதற்கு தகுந்த வகையான ஆவணப்படுத்தும் முறைகளைப் பின்பற்றுதல். சுங்கம் முதல் ஓண்டிப்பூதூர் வரையிலான சாலையின் நடுவில் செடிகளை நட்டு காற்று மாசைக்குறைத்தல். ரத்தினம் கல்லூரியிலிருந்து வெளியேரும் கழிவு நீரை மரங்களுக்கு ஊற்றும் வகையில் தூய்மைப்படுத்துவது. ரயில்வே கேட்டின் அருகில் சிறு சிறு காடுகளை உருவாக்குவது. மதுக்கரை அருகே யானைகள் மரணமடைவதை தடுக்க காடுகளுக்குள் தண்ணீர் தொட்டிகள் மற்றும் வாழைத்தார்களை உணவாக அளிப்பது. மக்கள் ஆர்வமுடன் இருப்பார்களேயானால் அவர்கள் பகுதியிலும் மரங்கள் நட்டு அந்த இடத்தின் அருகாமையில் உள்ள மக்களின் உதவியுடன் பாராமரித்தல். வீதி நாடகங்களுக்கான போட்டிகளை பள்ளிக் கல்லூரிகளில் நடத்தி குழந்தைகளிடையே நல்ல சிந்தனைகளை உருவாக்குவது. மழைநீர் குட்டைகளை ஆங்காங்கே நிறுவி தண்ணீர் சேமிப்பது. ஆறு அடி உள்ள மரங்களை மட்டுமே நடுவது, ஆகவே, நமக்காகவே ஒரு நர்ஸரி உருவாக்குவது. ஆர்வம் உள்ள தனியார் நிறுவனங்களிடமும் நிதிபெற்று, அரசாங்கத்தின் திட்டங்களையும், இதற்கான நிதிகளையும் ஒருமுகப்படுத்தி திட்டங்களை தன் ஆர்வலர்கள் உதவியுடன் நிறைவேற்றுவது. போன்ற பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...