கத்தியைக் காட்டி செல்போன் திருட்டு - ஒருவர் கைது

பீளமேடு பகுதியில் வீட்டில் புகுந்து கத்தியைக்காட்டி மிரட்டி செல் போன் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் மேத்திவ். இவரது மகன் ஜஸ்டின் (19). கடந்த செவ்வாயன்று முகவரி விசாரிப்பதுபோல் இவரது வீட்டிற்கு வந்த மூன்று வாலிபர்கள் ஜஸ்டின் தனியாக இருந்ததை அறிந்து கத்தியைக் காட்டி மிரட்டி திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து, வீட்டில் இருந்த 3 செல்போன்களை அந்த வாலிபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து, பீளமேடு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து காவல் துறையினர் வழக்கு பதிந்து கொள்ளையில் ஈடுபட்ட மூவர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில், இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது கோவை என்.எச். சாலை பகுதியைச் சேர்ந்த ரத்துல், ரோஷன், குட்டி ஆகிய மூவரும் என தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, ரோஷனை காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாகியுள்ள ரத்துல் மற்றும் குட்டியை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...