மனைவியை கத்தியால் குத்திய கணவர் - போலீஸ் விசாரணை

கோவை, கோவில் மேடு பகுதி, ஜமீதர் வீதியைச் சேர்ந்தவர் சக்தி. இவரது மனைவி ஷேமலதா (37). இவர்களுக்கு இடையே கடந்த 12 வருடத்திற்கு முன் திருமணம் நடைபெற்று 7 வயதில் பெண் மற்றும் 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இதனிடையே, கடந்த 6 மாதத்திற்கு முன் ஏற்பட்ட கருத்துவேறுபாடின் காரணமாக தம்பதியர் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். 

இந்நிலையில், வெள்ளியன்று (இன்று) காலை விஓசி நகர் பகுதியில் ஷேமலதா நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த சக்தி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியைக் கொண்டு ஷேமலதாவை கண்மூடித் தனமாக தாக்கிவிட்டு அப்பகுதியில் இருந்து தலைமறைவானார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஷேமலதாவை மீட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த துடியலூர் காவல் துறையினர் தலைமறைவான சக்தியின் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...