காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது - தமிழிசை சௌந்தரராஜன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்  பேசியதாவது:-

''காவிரி விவகாரம் தொடர்பாக திமுக அழைப்பு விடுத்துள்ள அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்வை ஏற்படுத்தாது. அரசியல் காரணங்களுக்காக காலதாமதமாக நடத்தப்படும் இந்த அவசியமற்ற கூட்டத்தில் பாஜக கலந்து கொள்ளாது. 

3 தொகுதி தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி போட்டியிடாதது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. தமிழக மக்களின் ஆதரவு உள்ளதாகக் காட்டிக் கொள்ளும் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இடதுசாரி தலைவர்கள் ஏன் தேர்தல் களத்தில் இறங்க பயப்படுகிறார்கள். தேர்தல் ஆணையம் நேர்மையுடனும், நடுநிலையுடனும் தேர்தலை நடத்த வேண்டும். மக்களின் ஆதரவுடன் மாற்று சக்தியாக பாஜகவை அடையாளப்படுத்தும் வகையில் பாஜக 3 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது. இத்தொகுதிகளில் போட்டியிடும் 3 பேர் பட்டியலை பாஜக மத்திய தலைமைக்கு அனுப்பி உள்ளது. மத்திய தலைமையின் ஒப்புதலுக்கு பிறகு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். 

மேலும், பணப்பட்டுவாடா செய்த புகாரில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட தொகுதிகளில் மீண்டும் அதே வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளித்திருப்பது ஜனநாயகத்தை திராவிட கட்சிகள் மதிப்பதில்லை என்பதை காட்டுவதாக உள்ளது. தலாக் முறை பெண்ணுரிமைக்கு எதிரானது, இம்முறைக்கு இஸ்லாமிய பெண்களே எதிராக உள்ளனர். மதம் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் சட்டங்களை பாஜக ஏற்படுத்த முயல்கிறது என்பது தவறானது. 

தமிழக முதல்வர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பொறுப்பற்ற நிலையில் பேசி வருவது ஆரோக்கியமான நடைமுறை இல்லை. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சந்திப்பு நாகரிக அரசியலின் வெளிப்பாடு. அதில் கருத்து சொல்லவோ, விமர்சனம் செய்யவோ எதுவும் இல்லை. 

சிப்பெட் தமிழகத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்படாது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழகத்தை ஆளும் கட்சிகள் தகுதியான இடத்தை தேர்வு செய்யவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் நிச்சயம் அமைக்கப்படும். தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை தேறி வருவது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இலங்கையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பின்புலத்தை ஆராய்ந்து, இதுபோன்ற செயல்களை ஆரம்ப நிலையிலேயே தடுக்கப்பட வேண்டும்'' என தமிழிசைசௌந்தரராஜன்   தெரிவித்தார்.

Newsletter

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...