ஒரே பகுதியில் பெண்களிடம் 13 சவரன் கொள்ளை

கோவை, சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜம்மாள் (55). நேற்றுமுன்தினம் சூலூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின், உறவினர்களுடன் எஸ்.எல்.பி.நகரில் உள்ள பூங்காவிற்கு சென்றுவிட்டு ராஜம்மாள் மட்டும் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். 

அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ராஜம்மாளின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து சிங்காநல்லூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சூலூர் பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவரது மனைவி ஆனந்தவள்ளி (35) செவ்வாயன்று அலுவலக வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துகொண்டிருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் ஆனந்தவள்ளியின் கழுத்தில் இருந்த 13 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துள்ளனர். இதனை தடுக்க முயற்றித்த ஆனந்தவள்ளி, இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இருப்பினும், அவர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பித்துள்ளனர். இந்நிலையில், அவர்களது வாகன எண்ணை மட்டும் ஆனந்தவள்ளி கவணித்துள்ளார். அந்த எண் TN 36 D 2333 ஆகும். இந்த வாகன எண்ணை ஆதாரமாகக் கொண்டு சூலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...