குட்டியுடன் காட்டுக்குள் செல்ல தயாரான பெண் யானை


கோவை மாவட்டம், பெரியதடாகம் அருகே அமைந்துள்ளது மாங்கரை வனப்பகுதி. இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண் காட்டு யானை ஒன்று உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கீழே விழுந்துகிடந்தது. இதனையறிந்த வனத்துறை மருத்துவர்கள் அந்த பெண் காட்டு யானைக்கு சிகிச்சை அளித்துவந்தனர். 

யானையின் உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் அப்பகுதியிலேயே உடல் நலமின்றி படுத்துக்கொண்டது. இதனைத்தொடர்ந்து கடந்த 21-ம் தேதியன்று அந்த யானையை வனத்துறையினர் லாரியின் மூலம் சாடிவயல் யானைகள் முகாமிற்குக் கொண்டுசென்று சிகிச்சை அளித்தனர். இதனிடையே, அந்தப் பெண் காட்டு யானை கடந்த 24-ம் தேதியன்று ஆண் குட்டி ஒன்றை ஈன்றது. 

இதைத்தொடர்ந்து, யானைக்கும், யானை குட்டிக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததைத்தொடர்ந்து இரு யானைகளின் உடல்நலத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

எனவே, கும்கி யானைகளின் உதவியுடன் அந்த இரு யானைகளையும் காட்டிற்குள் அனுப்ப வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

வனத்துறையினரின் தொடர் சிகிச்சைக்குப் பின் காட்டு யானையின் உடல்நலம் முன்னேற்றமடைந்து தற்போது குட்டியுடன் காட்டிற்குள் செல்லும் நிகழ்வு வனத்துறையினர் மற்றும் வன ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...