கோவையில் விடிய விடிய கொட்டிய கனமழை!


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் நேற்றிரவு பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 30ம் தேதி துவங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது போன்றே நேற்று துவங்கியுள்ளது.

இந்நிலையில், கோவையில் நேற்று மாலை முதலே மழை பெய்தது. இரவில் இடி மின்னலுடன் கன மழை கொட்டி தீர்த்தது. கோவை மாவட்டத்தில் மொத்தமாக 413.90 மில்லி மீட்டர் பதிவாகி உள்ளது. கனமழையின் காரணமாக சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். 



மேலும், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அவினாசி ரோட்டில் லட்சுமி மில் பகுதி அருகில் மழை வெள்ளம் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர். மேலும் அவினாசி மேம்பால சாலையில் மழை தண்ணீர் தேங்கியது. இன்று அதிகாலை வரை அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. பின்னர் மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து ராட்சத மோட்டார் மூலம் தண்ணீரை இறைத்து வெளியேற்றினர். கோவை லங்கா கார்னர் பாலம், கோவை அரசு ஆஸ்பத்திரி போன்ற பகுதிகளில் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

கோவை மாவட்டத்தில் துடியலூர், போத்தனூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், வால்பாறை, ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. துடியலூர் அருகே வெள்ளக்கிணறு சமத்துவபுரத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது.

கோவை மாவட்டத்தில் இன்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பொள்ளாச்சி - 110

பெரிய நாயக்கன் பாளையம் - 52

சூலூர் - 43

கோவை தெற்கு-37

வால்பாறை - 36

ஏர்போர்ட்-29.20

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்-28.70

சின்ன கல்லார் - 18

மேட்டுப்பாளையம் - 11

சின்கோனா - 8

அன்னூர் -  4.

Newsletter

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 49 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்...

இதர பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவர்களுக்கு மத்திய அரசின் PM...

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (02.09.2026) மின்தடை

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 2ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...