பாலித்தீன் பைகளை தவிர்த்து துணிப் பைகளை பயன்படுத்த மாநகராட்சி ஆணையர் ஆலோசனை



கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் தலைமையில் கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து ஹோட்டல் உரிமையாளர்களுடன் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக துணிகளால் ஆன பைகளை பயன்படுத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் வியாழனன்று (இன்று) நடைபெற்றது. 



இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவிக்கையில், ''கோவை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகள் பெருகி வருவதால் சுற்றுசூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. இதை தடுத்திடும் வகையில் இன்று அனைத்து ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் சுகாதார அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகள் உபயோகத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், பாலித்தீன் பைகள் எளிதில் மக்குவதில்லை, பாலித்தீன் பைகளால் பல்வேறு உடல்நிலைப் பிரச்சனைகளும் ஏற்படுகிறது. இதை தடுத்திடும் வகையில் அனைத்து ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக துணிகளால் ஆன பைகளை உபயோகிக்குமாறும், குறிப்பாக ஹோட்டல் உரிமையாளர்கள் தங்களின் வாடிக்கையாளர்கள், பார்சல் வாங்க வரும் பொழுது பாத்திரங்களோ அல்லது துணிகளால் ஆன பைகளை கொண்டுவருமாறும் பொது மக்கள் அறியும் வகையில் அறிவிப்புப்பலகை வைத்திடுமாறும், தவிர்க்க முடியாத பட்சத்தில் ஹோட்டல்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் துணிகளால் ஆன பைகளையே வாடிக்கையாளர்களுக்கு வழங்கிடுமாறு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், பைகளில் 95 சதவிகிதம் பிளாஸ்டிக் கலந்திருப்பதால் மக்கும் தன்மை கிடையாது, ஆகையால் பொது மக்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் இதை பயன்படுத்த வேண்டாம் என க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், துணை ஆணையர் ப.காந்திமதி, நகர் நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், உதவி நகர்நல அலுவலர் எம்.சந்தோஷ்குமார், ஸ்ரீ அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர்கள் சீனிவாசன், விவேக் சீனிவாசன், நியூ ஆரிய பவன் ஹோட்டல் உரிமையாளர் பாலாஜி, சூரியா ஹோட்டல் உரிமையாளர் சுந்தர்ராஜன், சுப்பு மெஸ் உரிமையாளர் செந்தில்குமார், ஸ்ரீ ஆனந்தாஸ் ஹோட்டல் உரிமையாளர் வெங்கடேஷ், ஆர்.ஹெச்.ஆர் ஹோட்டல் உரிமையாளர் சிவக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...