வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளை


பீளமேடு பகுதியில் விட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் ரொக்கபணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவை, பீளமேடு ஹட்கோ காலனி பகுதியைச் சேர்ந்தவர் சிவசங்கர். இவர் அந்த பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் சென்றுள்ளார். பின் திங்களன்று இரவு திரும்பி வீட்டிற்க்கு வந்தபோது, வீட்டின் முன்பக்க கேட் மற்றும் கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 20 சவரன் தங்க நகைகள் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 

இதையடுத்து பீளமேடு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் தடயங்களை சேகரித்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...