சாலை விபத்தில் முன்னாள் தாசில்தார் பலி!


கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி (46). இவர் கோவை தெற்கு கோட்டாச்சியர் மதுராந்தகியின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்தார். இன்று காலை கிருஷ்ண மூர்த்தியும் அவரது மனைவி கவுரி-யும் இருசக்கர் வாகனத்தில் ஆத்துப்பாலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த சரக்கு ஆட்டோ மோதியதில் கணவன் மனைவி இருவரும் தூக்கியெறியப்பட்டனர். 

இந்த  விபத்தில் கிருஷ்ணமூர்த்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து, அருகில் இருந்த பொதுமக்கள் கணவன் மனைவியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி கிருஷ்ண மூர்த்தி உயிரிழந்தார். கவுரி தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இச்சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

உயிரிழந்த கிருஷ்ண மூர்த்தி மேட்டுப்பாளையம் நகராட்சியில் தாசில்தாராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...

Park Institutions Students Gain Practical Cybersecurity Exposure

Park Institutions organised a seminar on Enterprise Vulnerability Management, providing 150 students from the Computer S...

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...