கோவையில் தடையை மீறி மது விற்பனை செய்த 15 பேர் கைது.


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மரணமடைந்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூன்று நாட்கள் அடைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில் தடையை மீறி, மது விற்பனை வெகு விமரிசையாக நடைபெற்றது. 

டாஸ்மாக்  கடைகளிலில் இருந்து சற்று தொலைவில் நின்று கொள்ளும் பார் ஊழியர்கள் மது பாட்டில்களை மறைத்து வைத்து வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்து வந்தனர். இதையறிந்த போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, பீளமேடு, ஆர்.எஸ்.புரம் , தொண்டாமுத்தூர், கருமத்தம்பட்டி உள்ளிட்ட 7 இடங்களில் தடையை மீறி மது விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.  

இதைத்தொடர்ந்து 15 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 451 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து, போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இவ்வாறு விற்பனையாகும் மதுவை அருந்துபவர்கள் மது போதையில் தேவையில்லாத ரகளையில் ஈடுபட வாய்ப்பு உள்ளதால் உடனடியாக இந்த மூன்று நாட்களும் மது விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்ய வேண்டும் என கோவை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...