ஓ எல் எக்ஸ்-யில் கார் விற்பனைக்கு என கூறி மோசடியில் ஈடுபட்ட 7 பேர் கைது



கோவை மாவட்டம், நஞ்சுண்டாபுரம் சாலை ஸ்ரீபதி நகரைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி அருண்பாபு (60). கடந்த மாதம் 27ம் தேதியன்று (OLX) ஓஎல்எக்ஸ்-யில் கார் ஒன்றின் விற்பனைக்கான விளம்பரத்தினை பார்த்துள்ளார். அதன் விலை 4.5 லட்சமாகும் . 

இதைத்தொடர்ந்து அந்த கார் விளம்பரத்தினை பதிவிட்டவர்களுக்கு தொலைபேசியில் அழைத்து விசாரிக்கையில் அவர்கள் முன்தொகையாக 5 ஆயிரம் ரூபாயினை வங்கிக் கணக்கில் செலுத்துமாறு கூறியுள்ளனர். அருண்பாபுவும் அந்த தொகையினை செலுத்தியுள்ளார்.

பின், அந்த நபர்களிடம் இருந்து எவ்வித தகவலும் அருண்பாபுவிற்கு வரவில்லை . தொடர்ந்து அந்த தொலைபேசி எண்ணும் அனைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அருண்பாபு இதுகுறித்து கோவை மாவட்ட சைபர் கிரைமில் கடந்த 31ம் தேதியன்று புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து சைபர் கிரைம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் பொள்ளாச்சியை சேர்ந்த நரேஷ் (22), செரிஃப் (22), அபுதாகிர் (22), முஸ்தப்பா (21), முசாதிக் (21), சம்ருதின் (19) மற்றும் மதினா பேகம் (29) ஆகிய 7 பேர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. 

இதையடுத்து, அந்த 7 பேரையும் கைது செய்த காவல் துறையினர் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் இதுபோன்று போலியான விளம்பரங்கள் கொடுத்து பலரிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்த ஒரு கார் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். 

இந்த 7 பேரின் புகைப்படங்களும் இன்று மாலை 5 மணியளவில் வெளியிடவுள்ளதாக சைபர் கிரைம் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...