டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டு சிறுமிகள் உட்பட 3 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை


கோவை மாவட்டத்தில் சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 சிறுமிகள் மற்றும் கோவையை சேர்ந்த பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களிடம் மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனைகளில் அவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து டெங்குவால் பாதிக்கப்பட்ட மூவருக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

மேலும், இதுகுறித்து தெரிவித்த இருப்பிட மருத்துவர் சவுந்தரவேல், தற்போது வழங்கப்பட்டு வரும் சிகிச்சை காரணமாக மூவருக்கும் உடல்நிலை தேறிவருவதாகவும், டெங்கு காய்ச்சலுக்கான மருந்துகள், இரத்ததட்டுகள் போன்றவை போதுமான அளவில் உள்ளதாகவும் கூறினார். 

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறிய அவர், பொதுமக்கள் தங்களுடைய சுற்றுப்புறத்தை நீர் தேங்காமல் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வப...

கோவையில் அடுத்தடுத்து சாலை விபத்துகள்: முதியவர் பலி; 4 பேர் படுகாயம்

கோவையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நான்கு தனித்தனி சாலை விபத்துகளில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்; நான்கு பேர் காயமடைந...

கோவையில் கஞ்சா, குட்கா விற்பனைக்கு எதிராக போலீஸ் அதிரடி: 7 பேர் கைது; 25 கிலோ பறிமுதல்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக போலீசார் நடத்திய சோ...

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...