கோவை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. 

இதில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், "நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சரால் நடமாடும் மக்கள் குறைதீர்க்கும் வாகனம் துவக்கி வைக்கப்பட்டது. மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டலங்களிலும் நடமாடும் மக்கள் குறைதீர்க்கும் வாகனமானது திங்கள் முதல் வெள்ளி வரை 5 மண்டலத்திற்கு உட்பட்ட வார்டுகளுக்குச் சென்று பொது மக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை குறைதீர்க்கும் பெட்டியில் போடப்பட்டு, அம்மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.



மேலும், மேற்கண்ட ஐந்து மண்டலங்களின் அலுவலகத்திற்கு தினமும் மாலை 4.30 மணியளவில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் நேரடியாகச் செல்லும் போது மக்கள் கோரிக்கை மனுக்களை கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து மேற்கு மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களாக தெரு விளக்குகள், குப்பைகளை அகற்றுதல், குடிநீர் குறைபாடு, சாக்கடை தூர்வாறுதல், சாலைகள் சீரமைக்கும் பணிகள் என பல்வேறு உதவிகள் கோரி 20 மனுக்கள் பெறப்பட்டது. 

இம்மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது." இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார். 

இக்கூட்டத்தில் துணை ஆணையர் ப.காந்திமதி, மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.எம்.திவாகர், மேற்கு மண்டல உதவி ஆணையர் கே.ராமைய்யா, உதவி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...