இந்திய அளவிலான சாம்பியன்ஸ்ஷிப் ஹாக்கி போட்டியில் நடுவர்களாக தேர்வு செய்யப்பட்ட குன்னூர் இளைஞர்கள்

குன்னூரைச் சேர்ந்த ஸ்ரீராம் (23), பிரசாத் (21) ஆகிய இருவரும் ஹாக்கி இந்தியா-வால் இந்திய அளவில் நடைபெறவுள்ள ஹாக்கி 7-வது சாம்பியன்ஸ்ஷிப் போட்டியில் நடுவர்களாக பங்கேற்கவுள்ளனர்.

இப்போட்டியானது, வரும் 2017 ஜனவரி 3ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து நீலகிரி ஹாக்கி அசோசியேசன் தலைவர் எஸ்.அனந்தகிருஷ்ணன் கூறியதாவது:- "கடந்த 2000-ஆம் ஆண்டில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இந்திய அளவிலான ஹாக்கி போட்டியில் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர். 2013-ஆம் ஆண்டில் இருந்து ஸ்ரீராம் மற்றும் பிரசாத் ஆகியோரை இதற்காக தயார்படுத்தி வருகிறோம். அவர்கள் கடந்த 2 வருடமாக பல்வேறு ஹாக்கி போட்டிகளில் பங்கேற்று அனுபவம் பெற்றுள்ளனர்" என்றார்.

நீலகிரி ஹாக்கி அசோசியேசன் செயலாளர் ஜெ.பாலமுருகன் கூறியதாவது:- "ஸ்ரீராம் மற்றும் பிரசாத் ஆகியோர் மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்களது கவனம் முழுவதையம் ஹாக்கியில் மட்டுமே செலுத்தி தற்போது இந்திய அளவிலான போட்டிகளில் நடுவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...