நாளை முதல் ஏடிஎம்களில் ரூ.4500 எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு


ஜனவரி 1ம் தேதி முதல் ஏடிஎம் மையங்களில் வாடிக்கையாளர்கள் 4500 ரூபாய் வரை எடுத்துக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், இதனால் வாராந்திர பணம் எடுக்கும் தொகையில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. 

மக்களின் பயன்பாட்டில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8ம் தேதியன்று இரவு பிரதமர் மோடி அறிவித்தார். மேலும், நவம்பர் 10-ஆம் தேதி முதல், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30ம் தேதிக்குள் வங்கிக் கணக்கில் செலுத்தலாம் என்றும் அவர் அறிவித்தார். மோடி கூறியபடி, அரசு வழங்கிய 50 நாள் காலக்கெடு நேற்றுடன் (டிச. 30) முடிவடைந்தது.

இந்நிலையில், நாளை முதல் (2017 ஜன. 1) ஏடிஎம் மையங்களில் வாடிக்கையாளர்கள் 4500 ரூபாய் வரை எடுத்துக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. முன்னதாக குறிப்பிட்ட சில வங்கி பயனாளர்கள் 2500 ரூபாய் வரை ஏடிஎம் மையத்தில் நாள் ஒன்றுக்கு எடுக்கலாம் என இருந்த உச்சவரம்பு தற்போது 4500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், வாராந்திர பணம் எடுக்கும் தொகையில் எவ்வித மாற்றமும் இல்லை என கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...