பிரதமர் மோடியின் அறிவிப்புகளுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மாவட்ட எஸ்ஐஇஎம்ஏ அமைப்பு


2017 புத்தாண்டை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து சிறப்புரையாற்றினார்.

அப்போது, விவசாயம் மற்றும் சிறு, குறு தொழில் வளர்ச்சி மற்றும் பொதுமக்களுக்கு சில சிறப்புத் திட்டங்களை அறிவித்தார்.

அதில், நகர்புறங்களில் வசிக்கும் ஏழை மக்கள் வீடுகட்டும் திட்டத்தில் 3 சதவிகித வட்டியில் ரூ.12 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும்.

சிறு, குறு தொழில் முனைவோர், வணிகர்களுக்கு 1 கோடி முதல் 2 கோடி ரூபாய் வரை மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் சிறிய தொழில் நிறுவனங்கள் வளர்ச்சியடையும்.

மோடியின் இந்த அறிவிப்பு பொருளாதார நெருக்கடியில் தொழில்துறையினர் தவித்துக்கொண்டிருக்கும் இச்சூழ்நிலையில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ஒரு உறுதுணையாக அமைந்துள்ளது.

பிரதமர் மோடியின் இத்தகைய சிறப்புத் திட்டங்கள் பாராட்டுக்குறியவை என தென்னிந்திய தொழில்நுட்ப உற்பத்தியாளர் கூட்டமைப்பின் தலைவர் கே.கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...