பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட கோவை மாநகராட்சி ஆணையர்


கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் புளியகுளம் பகுதியில் மாநகராட்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அப்பகுதியில் செயல்பட்டு வரும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்ற அவர் மாணவிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரின் இந்த சந்திப்பு மாணவிகள் மத்தியில் உற்சாகத்தையும், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகராட்சியில் பல்வேறுகட்ட பணிகளை மேற்கொண்டு வரும் மாநகராட்சி ஆணையர் பள்ளி மாணவிகளுடன் சிலமணி நேரங்கள் ஒதுக்கி கலந்துரையாடலில் ஈடுபட்டதற்கு அப்பள்ளி ஆசிரியர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்வின் போது "நான் தான் மாற்றம்" என்னும் மாணவிகள் அமைப்பும் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயனைச் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...