கோவை அருகே குளத்தில் முகாமிட்டுள்ள காட்டு யானை கூட்டம் - விரட்டும் பணியில் வனத்துறையினர்


கோவை அருகே குளத்தில் முகாமிட்டுள்ள 5 காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் யானைகள் விரட்டியதில் வெள்ளியங்கிரி என்ற வனத்துறை ஊழியர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



கோவை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவ்வப்போது  மனிதர்களையும் தாக்கி வருகிறது. இதனால் கோவை வனப்பகுதியில் மனித மிருக மோதல் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தீத்திபாளையம் வனப்பகுதியில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு வெளியேறிய 5 காட்டு யானை கூட்டம் அருகில் இருந்த விவசாய நிலங்களை சேதப்படுத்தியது, இதனையடுத்து அங்கிருந்து செட்டிபாளையம் கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை கூட்டம் அருகில் உள்ள குளத்தில் தற்போது முகாமிட்டுள்ளது. குட்டி உட்பட 5 யானைகள் குளத்தில் இருப்பதை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தை தொடர்ந்து அங்கு வந்த கோவை சரக வனத்துறையினர், யானைகளை பட்டாசு வெடித்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது காட்டு யானைகள் வனத்துறையினரை தாக்க முற்பட்டது. இதனால் வனத்துறையினர் சிதறி ஓடுகையில் வெள்ளியங்கிரி என்ற வன காவலர் கீழே விழுந்தில் தலையில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் குளத்தில் உள்ள 5 யானைகளை விரட்டுவது குறித்து வனத்திறையினர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது பகல் நேரம் என்பதால் யானைகளை விரட்டினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் மாலை நேரத்தில் யானைகளை விரட்ட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...