பீட்டா அமைப்பின் முதன்மை செயல் அதிகாரியின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள்

தமிழத்தில் பொங்கல் பண்டிகையின் போது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்க காரணமான பீட்டா அமைப்பை கண்டித்து, கோவை அரசு கலைக்கல்லூரியில் அகில பாரதீய வித்யார்தி பரிஷத் என்ற மாணவர் அமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 



அப்போது கண்டன முழக்கங்களை எழுப்பியபடி பீட்டா அமைப்பின் இந்தியாவிற்கான முதன்மை செயல் அதிகாரியான பூர்வா ஜோஸ் புராவின் உருவபொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர். 

இதைத்தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதியளிக்க வேண்டுமெனவும், பீட்டா உள்ளிட்ட அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டுமெனவும் மாணவர் அமைப்பினர் வலியுறுத்தினர். 

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 18 பேரை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

இதேப்போல ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு ஆதரவாக கோவை வ.உ.சி மைதானத்தில் திரண்ட சமூக வலைதள பதிவாளர்கள், ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் பதாகைகளை ஏந்தியபடி நின்றனர். அப்போது முகநூல், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக ஒருங்கிணைந்து இருப்பதாகவும், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...