தமிழகத்தின் வறட்சி நிலவரம் தொடர்பான அறிக்கையை தமிழக அரசு மத்திய அரசுக்கு அனுப்பவில்லை என பா.ஜ.க தேசிய செயலாளர் குற்றச்சாட்டு

தமிழகத்தின் வறட்சி நிலவரம் தொடர்பான அறிக்கையை தமிழக அரசு இதுவரை மத்திய அரசுக்கு அனுப்பவில்லை எனவும் உடனடியாக தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  பா.ஜ.க  தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த  பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதாவது:- மத்திய அரசின் பண மதிப்பிழப்பு அறிவிப்பு காரணமாக தங்கம், உணவு தானியங்கள் உள்ளிட்ட பொருட்களின் விலை குறைந்துள்ளதாகவும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் முழு பலன் தெரிய 6 மாதம் காலம் வரை ஆகும் எனவும் தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு போட்டிகளை தடை செய்ய காரணமாக இருந்தது சோனியா காந்தி, கருணாநிதி, ஜெய்ராம் ரமேஷ் ஆகிய மூவர் மட்டுமே என குற்றம் சாட்டிய அவர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தக் கோரி உண்ணாவிரதம் மேற்கொள்வதென்றால் மு.க.ஸ்டாலின் கருணாநிதி வீட்டின் முன் மட்டுமே போராட்டம் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். 

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த மத்திய அரசு உறுதி கொண்டுள்ளதாகவும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்து ஜல்லிக்கட்டை நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். 

விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை தவிர்க்க வேண்டும் எனக்கேட்டுக்கொண்ட அவர், மத்திய அரசின் பயிர்க்காப்பீட்டு திட்டங்களை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

வரவிருக்கும் பட்ஜெட்டில் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் புதிய அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார். ப.சிதம்பரத்தின் பேச்சுக்கள் அவர் எப்படி நிதியமைச்சராக பணியாற்றினார் என்பதை கேள்விக்குறியாக்குவதாகவும் எச்.ராஜா குற்றம்சாட்டினார்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...