அதிக கட்டணம் வசூலித்த கட்டண கழிப்பிட குத்தகைதாரர் உரிமத்தை ரத்து செய்து மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை


கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் மத்திய மண்டலம், வார்டு எண் 54-க்குட்பட்ட காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் உள்ள நவீன கட்டண கழிப்பிடத்திற்கு அதிக கட்டணம் வசூல் செய்தது தொடர்பாக புகார் வரப்பெற்றதை தொடர்ந்து குத்தைகைதாரர் செலுத்தியுள்ள வைப்புத் தொகையை பறிமுதல் செய்து குத்தகை உரிமம் ரத்து செய்யப்பட்டது.

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில், உதவி ஆணையர் மற்றும் உதவி வருவாய் அலுவலர் ஆகியோர் தலைமையில் மத்திய மண்டலம், வார்டு எண் 54-ற்குட்பட்ட காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் உள்ள நவீன கட்டண கழிப்பிடத்திற்கு அதிக கட்டணம் வசூல் செய்தது தொடர்பாக புகார் வரப்பெற்றதை தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

இந்த ஆய்வில் குத்தைகைதாரர் வேலுச்சாமி என்பவர் கட்டண கழிப்பிடத்தின் ரூ.1 கட்டணம் வசூல் செய்யாமல், அதற்கு பதிலாக ரூ.3 கூடுதல் கட்டணம் வசூல் செய்தது ஆய்வில் கண்டறியப்பட்டது. 

மேலும், இந்த குத்தகைதாரரை பலமுறை எச்சரிக்கை செய்தும் அதிக கட்டணம் வசூலித்ததால் குத்தைகைதாரர் வேலுச்சாமி என்பவர் செலுத்தியுள்ள வைப்புத் தொகையை பறிமுதல் செய்து குத்தகை உரிமம் ரத்து செய்யப்பட்டது.

மேலும், இது போன்ற மாநகராட்சியின் கட்டண கழிப்பிட கட்டணங்கள், இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்தும் இடங்களில் மாநகராட்சி நிர்ணயித்த தொகையை விட அதிக கட்டணம் வசூலிக்கும் குத்தகைதாரர்கள் மீது மாநகராட்சி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...