இராஜ வீதியில் மாநகராட்சி வாகன நிறுத்துமிடத்தில் அதிக கட்டணம் வசூல் செய்த குத்தகைத்தாரின் ஒப்பந்தம் ரத்து


கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் மத்திய மண்டலம் 83-வது வார்டுக்குட்பட்ட இராஜ வீதிலுள்ள மாநகராட்சி இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடத்தில் அதிக கட்டணம் வசூல் செய்த குத்தகைத்தாரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, அப்பணிக்கு மாநகராட்சி பணியாளர்கள் அமர்த்தப்பட்ட பணியாளர்கள் பணியில் இல்லாமல் அலுவலக முன்அனுமதியின்றி விடுப்பில் சென்ற மாநகராட்சி பணியாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை அன்று (10.01.2017) எடுக்கப்பட்டுள்ளது.

நான்கு சக்கர வரகனத்திற்கு ரூ.20 கூடுதல் கட்டணம் வசூல் செய்த குத்தகைத்தாரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, அப்பணிக்கு மாநகராட்சி பணியாளர்கள் அமர்த்தப்பட்ட பணியாளர்கள் பணியில் இல்லாமல் இருப்பதாக புகார் பெறப்பட்டதையடுத்து உதவி வருவாய் அலுவலர், சிறப்பு வரி ஆய்வாளர் மற்றும் வரி வசூலர் ஆகியோர் அன்று 09.01.2017 மற்றும் 10.01.2017 ஆகிய தேதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். 

மேலும், இவ்வலுவலகம் மூலம் மாநகராட்சி பணியாளர் செல்வக்குமார் மற்றும் 3 தனியார் பணியாளர்கள் என நான்கு பணியாளர்கள் வசூல் பணியினை மேற்கொண்டனர். ஆனால் 4 நபர்களும் வெளியூர் செல்வது தொடர்பாக அலுவலகத்திற்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. மேலும், மேற்படி 4 பணியாளர்களும் இவ்வலுவலக அனுமதியின்றி அவர்களே மூன்று தனியார் பணியாளர்களை பணியில் அமர்த்தி இருந்தனர். இதனால் மாநகராட்சி பணியாளர் செல்வக்குமார் மீது துறை வாரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...