கோவையில் விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்களின் கையெழுத்து மற்றும் சுயமி பிரச்சாரம் இயக்கம்

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SiO) கோவை மாவட்டத்தின் சார்பாக கோவையில் உள்ள கல்லூரிகளில் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் ஆதரவாக கையெழுத்து மற்றும் சுயமி பிரச்சாரம் நடைபெற்றது. இந்நிகழ்வுகளை தலைமை தாங்கிய கோவை மாவட்ட செயலாளர் அப்துல் ஆரிப் பேசுகையில்; “இந்தியா விவசாய பூமி இங்கு வாழும் மக்களில் பெரும்பாலனோர் விவசாயம் செய்யக்கூடியவர்கள். நம் நாட்டின் முதுகெலும்பே கிராமங்களும், விவசாயமும் தான். அரிசியும், திணைகளும், காய்கறிகளும், வாழையும், தென்னையும், கரும்பும் என பார்ப்பதற்கே பச்சை பசவேன இருந்த நம் தமிழகம் இன்று காய்ந்து கருகி வந்து கொண்டிருக்கின்றது. அதன் உச்சக்கட்ட நிலை விவசாயிகளின் மரணம். ஊருக்கே உணவளித்தவர்களுக்கு இந்த அவலநிலை என்பதை நினைக்கும்போது நெஞ்சம் பதறுகின்றது. தமிழுக்கும், தமிழக மக்களுக்கும், அதன் கலாச்சாரத்திற்கும் மிகவும் பாரம்பரிய வரலாறு உண்டு. அதன் வரலாற்றில் மிக முக்கியமானது பொங்கல் பண்டிகையும், வீர விளையாட்டான ஏறு தழுவுதலும். 



ஆனால் தமிழ் மக்களின் உணர்வுகளைப் புறக்கணிக்கும் விதமாகவும், உலகமயமாதல் சிந்தனையின் அடிப்படையில் ஏறு தழுவுதலால் ஏற்படும் காளைகளின் வளங்களை பெருக்கும் திட்டத்தைக் குறைக்கும் விதமாகவும் ஏறு தழுவுதலுக்குத் தடை விதித்துள்ளதை வைத்து அரசியல் செய்யும் மத்திய பி.ஜே.பி அரசு இரட்டை முகத்தை கடைபிடித்து வருகின்றது. மேலும் பொங்கல் பண்டிகையினை பொது விடுமுறையிலிருந்து எடுக்கும் எண்ணத்தை வெளிப்படுத்தியதும் பி.ஜே.பி அரசின் மாநில ரீதியிலான கலாச்சாரங்களையும், பண்பாட்டையும் புறக்கணித்து ஒற்றைக் கலாச்சாரத்தைத் திணிக்கும் அதிகார வர்க்கப் போக்கினை காட்டுவதாக உள்ளது. இதனை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும், இந்நிகழ்வு மாணவர்கள் மத்திய அரசின் பக்கம் இல்லை விவசாயிகளின் பக்கம் என்பதை உணர்த்தவே என்றும் குறிப்பிட்டார்.



மேலும், கோவை மாவட்ட கல்வி வளாக செயலாளர் முகமது ஆஷிக் கூறுகையில் “மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் குடும்ப மறு வாழ்விற்கும், விவசாயிகளின் பிரச்சனைகளைக் கேட்டறிந்து அவர்களின் அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் விதமாகவும் குறிப்பிட்ட அவர்களின் விவசாய நிலத்திற்கு நீர் வரத்தினை உறுதிப்படுத்தும் விதமாகவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இல்லையேல் மக்கள் புரட்சிதான் தீர்வு” என்றார்.



கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி மற்றும் கோவை அரசு கலைக் கல்லூரி ஆகிய இடங்களில் நடைபெற்ற இப்பிரச்சார இயக்கத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்களின் கையெழுத்துகளை விவசாயிகளுக்காக பதிவு செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...