ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் 13 வயது சிறுமிக்கு இருதய ஈரிதழ் வால்வு மாற்று சிகிச்சை


திடீரென முச்சுத்திணறல் ஏற்பட்ட சிறுமிக்கு கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதய நிபுணர் மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்பட்டது. சிறுமிக்கு ஈ சி ஜி எடுத்து பரிசோதனை செய்துபோது அவரது இடதுபுறத்தில் உள்ள ஈரிதழ் தடுப்பு வால்வில் (மிட்ரல் வால்வு)  à®•சிவு இருந்தது. அதோடு இருதயமும் பெரியதாகியிருந்தது. ஈரிதழ் வால்வு அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்ற நிலையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தியாகராஜமூர்த்தியின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். முதலமைச்சரின் காப்பீட்டின் கீழ் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.



டாக்டர் தியாகராஜமூர்த்தி தலைமையிலான டாக்டர்கள், விஜய் சதாசிவம் அசோக் ஹரிஹரன், மேனன், அருண்குமார், கிருஷ்ணன், சுஜித் ஆகியோர் அடங்கி குழுவினர் மிட்ரல் வால்வு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டனர். மார்பின் வலது பகுதியிலிருந்து 3 இன்ச் அளவிற்கு துளையிட்டு, இருதயம் மற்றும் நுரையீரல் மாற்று தொழில்நுட்ப சிகிச்சைப்படி வெற்றிகரமாக மேற்கொண்டனர். அவரது வால்வு, சரி செய்ய இயலாத அளவுக்கு மோசமடைந்திருந்தது. அறுவை சிகிச்சையில் மாற்றி அமைத்த பின், இரண்டு மணி நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பினார். தொடர்ந்து ஓரிரு நாளில் அவர் இயல்பாக நடக்கவும் செய்தார். தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக இத்தகைய வால்வு மாற்று அறுவை சிகிச்சையை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் முதல்வர் காப்பீட்டு திட்டத்திலேயே இலவசமாக இந்த சிறுமிக்கு சர்வதேச தரத்தில் செய்யப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...