'டேன் டீ தோட்டங்களை வனத்துறையிடம் அரசு ஒப்படைக்க கூடாது..!' - நீலகிரியில் சீமான் வலியுறுத்தல்

டேன் டீ தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக நீலகிரி அடுத்த பந்தலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் தலைமையில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் டேன்டீ எனப்படும் அரசு தேயிலை தோட்ட கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த தேயிலை தோட்ட கழகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாயகம் திரும்பிய தமிழர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது ஆட்குறைப்பு செய்யப்பட்டு சுமார் 5 ஆயிரம் பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். மேலும் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் தேயிலை தோட்டத்தை வனத்துறைக்கு ஒப்படைக்க தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இதற்கு டேன்டீ தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.



இதனிடையே நீலகிரி அடுத்த பந்தலூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன பொது கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றினார்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான், 1968-ல் பேரறிஞர் அண்ணா-வால் உருவாக்கப்பட்ட தேயிலைத் தோட்ட நிலங்களை வனத்துறைக்கு கொடுக்கக் கூடாது என்பதுதான் எங்களது கோரிக்கை அதை முன்னெடுத்து தான் இந்த போராட்டம் நடைபெறுகிறது.

நீண்ட காலமாக தாயகம் திரும்பிய நமது மக்கள் டேன் டீ தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றி வரும் நிலையில் தற்போது டேன் டீ -யை வனத்துறைக்கு கொடுப்பதன் மூலம் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தையும், வேலை வாய்ப்பை இழக்க நேரிடும்.

அதற்கு நிர்வாகம் தான் பொறுப்பு. தொழிலாளர் மக்கள் பொறுப்பேற்க முடியாது. 2,100 பேரை பணி நீக்கம் செய்துவிட்டு ஆட்கள் பற்றாக்குறை என கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது.

அரசு இதை கவனத்தில் எடுத்துக் கொண்டு மீண்டும் டேன் டீ-யை நடத்த வேண்டுமென்பது எங்களின் கோரிக்கை. அதற்காகத்தான் தொடர்ச்சியாக மக்கள் போராடி கொண்டிருக்கின்றனர்.

டேன் டீ தொழிலாளர்கள் நாளொன்றுக்கு கூலியாக கேட்பது 425 ரூபாய். ஒப்பந்தக் காலம் முடிந்தால் தேயிலை தோட்ட நிலங்கள் வனமாக மாற்றப்பட கூடாது, என்றார்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...