கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு - பிப்.24க்கு விசாரணை ஒத்திவைப்பு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை கொள்ளை தொடர்பான வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 24-ந்தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.



நீலகிரி: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கு சொந்தமாக கோத்தகிரி அருகே கொடநாடு எஸ்டேட் உள்ளது. சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த எஸ்டேட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வரும்போது தங்குவதற்காக சொகுசு பங்களா ஒன்றும் கட்டபட்டது.

இந்த பங்களாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ந்தேதி கொள்ளை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அப்போது, இரவு காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ், கேரளாவை சேர்ந்த சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டனர். முதல் குற்றவாளியான கனகராஜ் சேலம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார்.

இதனையடுத்து, சயான் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு தற்போது அனைவரும் ஜாமீனில் வெளிவந்துள்ளனர்.



இந்நிலையில், கடந்த 5 ஆண்டு காலமாக இந்த வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைப்பெற்று வருகிறது. தற்போது, இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர்.



மேலும், சிபிசிஐடி போலீசார் தரப்பில் விசாரணை அதிகாரி ஏடிஎஸ்பி முருகவேல், டி எஸ் பிக்கள் சந்திரசேகர், அண்ணாதுரை ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பில் சயான், தீபு, வாளையாறு மனோஜ், சதீசன், சந்தோஷ்சாமி, ஜீத்தின் ஜாய் உள்ளிட்டோர் ஆஜராகினர்.



விசாரணையின்போது, இதுவரை கொலை கொள்ளை சம்பவம் நடைபெற்றபோது காவல் காண்காணிப்பாளராக இருந்த முரளி ரம்பா உள்பட இதுவரை 48 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளதாகவும், அப்போதைய காவல் கண்காணிப்பாளரின் ஆய்வாளராக இருந்த ஜான் மற்றும் அப்போதைய கூடலூர் இன்ஸ்பெக்டர் சக்திவேல் உள்ளிட்ட பலரிடம் விசாரிக்க வேண்டி இருப்பதாலும், தொலை தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து பல்வேறு தகவல்கள் சேகரிக்க வேண்டி உள்ளதாலும் கால அவகாசம் வழங்க வேண்டுமென சிபிசிஐடி போலீசர் தப்பில் கேட்கப்பட்டது.



இதனையடுத்து மாவட்ட நீதிபதி முருகன், வழக்கு விசாரணை பிப்ரவரி 24-ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Newsletter

கோவை மாநகராட்சி புதிய ஆணையாளர் கட்டா ரவி தேஜாவை வாழ்த்திய மேயர்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா IAS இன்று பொறுப்பேற்றார். மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன்...

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...