'ஓம் நமச்சிவாயா என்பதை அனைவரும் சொல்லலாம்..!' - கல்யாணபுரி ஆதினம் இராஜ சரவண மாணிக்கவாசக ஸ்வாமிகள் தகவல்

ஓம் நமச்சிவாயா என்பது அதற்கென்று உண்டான சில மந்திரங்கள் உள்ளன. அப்படிதான் சொல்ல வேண்டும், ஆனால் ஓம் நமச்சிவாயா என்பது அனைவரும் சொல்லலாம் என்று திருப்பூரில் நடந்த விழாவில் கூனம்பட்டி கல்யாணபுரி ஆதினம் இராஜ சரவண மாணிக்கவாசக ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், செங்கப்பள்ளி அருகே கூனம்பட்டி கல்யாணபுரி ஆதினத்தில் 57ஆவது குருமகா சந்நிதானங்களின் மகர ஆதிரை திருநான் மங்கல குருவிழா, ஸ்ரீ ரத்ன விஜயாம்பிகை ஆலய மகா கும்பாபிஷேக விழா, ஆன்மார்த்தசுவாமி கருவறை அடிக்கல் நாட்டு விழா என முப்பெரும் விழாவின் முதலாவதாக இன்று 57ஆவது குருமகா சந்நிதானங்களின் மகர ஆதிரை திருநான் மங்கல குருவிழா கூனம்பட்டி கல்யாணபுரி ஆதினம் இராஜ சரவண மாணிக்கவாசக ஸ்வாமிகள் தலைமையில் நடைபெற்றது.

இந்த குருபூஜை விழாவில் ஸ்ரீமாணிக்கவாசக பெருமானுக்கு சர்க்கர அபிஷேகமும், தேவார இன்னிசையும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.



மங்கள இசை, கைலாய வாத்தியம் இசைக்கப்பட்டது. ஸ்ரீமாணிக்கவாசக சுவாமிகள் ரத உற்சவ திருவீதி உலா நடைபெற்றது.



இதனைத் தொடர்ந்து மகாயாகமும், பராயண வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் அருட் பணி சித்தர் விருது, சிவாச்சாரிய திலகம், சைவநெறி செஞ்சுடர், சிவாச்சாரிய திலகம் என 12 திருவண்பர்களுக்கு ஞான விருதுகள் வழங்கப்பட்டது.



முன்னதாக கூனம்பட்டி கல்யாணபுரி ஆதினம் இராஜ சரவண மாணிக்கவாசக ஸ்வாமிகள் செய்தியாளர்கள் சந்திப்பில், ஓம் நமச்சிவாயா என்பது அனைவரும் சொல்லலாம், முழு பலனையும் தரவல்லது ஹம் நமச்சிவாயா என்பது அதுக்குன்னு உண்டான சில மந்திரங்கள் உள்ளன. அப்படிதான் சொல்ல வேண்டும். ஆனால் ஓம் நமச்சிவாயா என்பது அனைவரும் சொல்லலாம் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...