ரிமேக் படங்களின் வெற்றி சினிமாவுக்கு ஆரோக்கியமே - கோவையில் நடிகை ரம்யா நம்பீசன் கருத்து

கோவை கணுவாய் பகுதியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ரம்யா நம்பீசன், வளர்ந்து வரும் நடிகர், நடிகைகளுக்கு வெப் தொடர்கள் நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளதாக தெரிவித்தார்.


கோவை: வளர்ந்து வரும் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட அனைவருக்கும் வெப் தொடர்கள் நல்ல வாய்ப்பாக அமைந்திருப்பதாக நடிகை ரம்யா நம்பீசன் தெரிவித்துள்ளார்.



கோவை கணுவாய் பகுதியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் (ஜே.எம். ஹவுசிங் வீட்டுமனை விற்பனை துவக்க விழா) பிரபல நடிகையும், பின்னணி பாடகியுமான ரம்யா நம்பீசன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றினார்.



அப்போது அவர் பேசியதாவது, திரைப்பட பின்னணி பாடகி வாணி ஜெயராம் நம்மை விட்டுப் பிரிந்தது, மீளாத்துயரம். தற்போது, நான் OTT தளங்களில் வெளியாகும் வெப் தொடர்களில் நடித்து வருகிறேன்.வெப் தொடர்கள் தற்போது வரவேற்பைப் பெற்று வருகிறது.

மேலும் வளர்ந்து வரும் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட அனைவருக்கும் வெப் தொடர்கள் நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

ரீமேக் படங்கள் குறித்த கேள்விக்கு, பதிலளித்த அவர், மலையாளத்திலிருந்து தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் ரீமேக் செய்யும் படங்கள் வெற்றி பெறுவது, திரைப்படத் துறைக்கு ஆரோக்கியமே.

இவ்வாறு அவர் கூறினார்.



மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரம்யா நம்பீசன் அவர் பாடிய ஃபை ஃபை என்ற பாடலை பாடினார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...