மகா சிவராத்திரி விழா - ஆட்டம், பாட்டம் என அதிரடியாக நடத்த தயாராகும் ஈஷா!

கோவை ஈஷா யோகா மையத்தில் வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ள மகா சிவராத்திரி விழாவிற்காக தமிழ் நாட்டுப்புற பாடகர் வேல்முருகன் உள்பட பல்வேறு மொழி பாடகர்கள் மற்றும் நடன குழுவினர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: கோவை ஈஷா மையத்தில் வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ள மகாசிவராத்திரி விழாவை கோலாகலமாக நடத்த ஈஷா அமைப்பு தயாராகி வருகிறது.

இதுதொடர்பாக ஈஷா யோகா மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

உலகில்‌ வேறு எந்த கலாச்சாரத்திலும்‌ இல்லாத வகையில்‌, நம்‌ தமிழ்‌ கலாச்சாரத்தில்‌ தான்‌ 'நடனம்‌ ஆடும்‌ ஒருவரை' கடவுளாகவும்‌ யோகியாகவும்‌ போற்றி கொண்டாடுகிறோம்‌.

இந்த முழு பிரபஞ்சமே ஒரு விதமான நடனத்தில்‌ இயங்குகிறது என நவீன அறிவியலாளர்கள்‌ கண்டறிந்துள்ளனர்‌. இதை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே உள்நிலையில்‌ உணர்ந்த யோகிகள்‌ பிரபஞ்ச கூத்தனான சிவனுக்கு சிதம்பரத்தில்‌ கோவில்‌ கட்டியுள்ளனர்‌.

இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ்‌ மண்ணில்‌ ஈஷா மஹாசிவராத்திரி விழா கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக மிக விமர்சையாக கொண்டாப்பட்டு வருகிறது. சிவனுக்கு உகந்த இந்த ராத்திரியில்‌ அவருடைய நடராஜர் அம்சத்தை மக்கள்‌ அனுபவ பூர்வமாக உணர்ச்சி நிலையில்‌ உணர்வதற்காக இவ்விழாவில்‌ பல்வேறு விதமான இசை மற்றும்‌ நடன நிகழ்ச்சிகள்‌ அரங்கேற்றப்படுகின்றன.



அந்த வகையில்‌ இந்தாண்டு பிப்‌.18-ம்‌ தேதி நடைபெறும்‌ மஹாசிவராத்திரி விழாவில்‌ தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம்‌, ராஜஸ்தான்‌ உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச்‌ சேர்ந்த பிரபல இசை கலைஞர்கள்‌ பங்கேற்க உள்ளனர்‌.

குறிப்பாக, தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த பிரபல நாட்டுப்‌புற கலைஞர்‌ வேல்முருகன்‌, ராஜஸ்தானி நாட்டுப்‌புற கலைஞர்‌ மாமேகான்‌, இசையமைப்பாளரும்‌, பிரபல சித்தார்‌ இசை கலைஞருமான நிலத்ரி குமார்‌, டோலிவுட்‌ பின்னணி பாடகர்‌ ராம்‌ மிரியாலா உள்ளிட்டோர்‌ பங்கேற்று பக்தர்களை இரவு முழுவதும்‌ விழிப்பாகவும்‌, விழிப்புணர்வாகவும்‌ வைத்து கொள்ள உள்ளனர்‌.



இது தவிர, கேரளாவைச்‌ சேர்ந்த 'தெய்யம்‌' நடன குழுவினர்‌, கர்நாடகாவை சேர்ந்த ஜனபாடா நாட்டு புற நடன கலைஞர்கள்‌, ஜார்ஜியாவைச்‌ சேர்ந்த நடன கலைஞர்களும்‌ விழாவை ஆட்டம்‌, பாட்டத்துடன்‌ அதிர செய்ய உள்ளனர்‌.



பிப்ரவரி 18ஆம்‌ தேதி மாலை 6 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்வானது, மறுநாள்‌ காலை 6 மணி வரை நடைபெறும்.‌ இவ்விழா ஈஷாவின்‌ அதிகாரப்பூர்வ யூ - டியூப்‌ சேனலான Sadhguru Tamil–ல் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படும்‌.



மேலும்‌, தமிழ்‌, இந்தி, ஆங்கிலம்‌, தெலுங்கு, கன்னடம்‌, மராத்தி என பல்வேறு மாநில மொழிகளில்‌ முன்னணி தொலைக்காட்சிகள்‌ மற்றும்‌ யூ - டியூப்‌ சேனல்களிலும்‌ நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...