வால்பாறை அருகே காட்டெருமை தாக்கி தொழிலாளி காயம்

வால்பாறை அருகேயுள்ள தாய்முடி எஸ்டேட் என்.சி பிரிவில் குடியிருந்து வரும் பழனிசாமி என்பவர், இன்று தேயிலை தோட்டத்தில் வேலை செய்து விட்டு, வீட்டிற்குத் திரும்பும் போது, காட்டெருமை அவரை தாக்கியதில் தலை மற்றும் கண்ணில் லேசான காயம் ஏற்பட்டது.


கோவை: வால்பாறை அருகே தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளியை காட்டெருமை தாக்கியதில் காயமடைந்தார்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வால்பாறை அருகே தாய்முடி எஸ்டேட் என் சி பிரிவில் குடியிருந்து வருபவர் பழனிசாமி(54).

இவர் இன்று தேயிலைத் தோட்டத்தில் வேலை முடித்து விட்டு, வீட்டிற்கு நடந்து வந்துள்ளார். அப்பொழுது அங்கு எதிர்பாராத விதமாக வந்த காட்டெருமைகள், பழனிசாமியை தாக்கியுள்ளது. இதில் அவருக்கு தலை மற்றும் கண்ணில் லேசான காயம் ஏற்பட்டது.



அருகிலிருந்த சக தொழிலாளர்கள் பழனிசாமியை மீட்டு எஸ்டேட் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.



பின்னர் மேல்சிகிச்சைக்காக வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Newsletter

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...