உடுமலையில் மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம் - நாட்டு இன மாடுகளை வளர்க்க விவசாயிகள் கோரிக்கை

திருமூர்த்தி மலை, பொன்னாலம்மன் சோலை, தளி, ஜல்லிப்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் பாரம்பரிய முறையில் சூரிய பொங்கல், பூமாதேவி பொங்கல், மாட்டுப் பொங்கல் என மூன்று வகை பொங்கல் வைத்து கிராம மக்கள் மகிழ்ந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி மலை, பொன்னாலம்மன் சோலை, தளி, ஜல்லிப்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் மாட்டுப் பொங்கல் பாரம்பரியமான முறையில் சூரிய பொங்கல், பூமாதேவி பொங்கல், மாட்டுப் பொங்கல் என மூன்று வகை பொங்கல் வைத்து வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.



இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, வருடம் முழுவதும் கால்நடைகள் விவசாயிகளுக்காக உழைத்து வரும் நிலையில், மாட்டுப்பொங்கல் தினத்தன்று கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக முன்னோர்கள் கூறிய இந்த அறிவுரையின் படி மாடுகளைக் குளிப்பாட்டி கொம்புகளுக்கு வர்ணம் பூசி அலங்கரித்து மாட்டுக்கு பிடித்த உணவு வகைகள் வழங்கி மாட்டுப்பொங்கலை பாரம்பரியமான முறையில் கொண்டாடி வருகின்றோம்.



மேலும், தற்சமயம் பெரும்பாலும் அனைவரும் கலப்பின மாடுகளை வைத்துள்ள நிலையில் நாட்டு மாடுகள் வளர்க்க அனைத்து விவசாயிகளும் முன்வர வேண்டும். இதற்கு தமிழக அரசு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தனர். இந்தநிகழ்வில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 10ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி...